செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (08:26 IST)

அரசு பணியாளர்கள் பணி நேரத்தை உயர்த்த திட்டமா..? – மத்திய அமைச்சர் பதில்!

மத்திய அரசின் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் வேலை நேரம் அதிகரிக்கப்பட உள்ளதா என்பது குறித்து மத்திய இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஏராளமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர் நல சட்டத்தின்படி ஒருநாளில் 8 மணி நேரம் வேலை என்ற அடிப்படையிலேயே இதுவரை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே பணியாளர்களின் தின்சரி பணி நேரத்தை அதிகரித்து விடுமுறையையும் கூடுதலாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக பேசிக் கொள்ளப்பட்டது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் “அதுபோன்ற திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.