1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 ஜனவரி 2022 (11:18 IST)

குடியரசு தின விழாவில் மேற்கு வங்க அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லை… மம்தா அதிருப்தி!

ஜனவரி 26 ஆம் தேதி நடக்க உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வருடம் தோறும் டெல்லியில் நடக்கும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடக்கும். ஆனால் இந்த ஆண்டு 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் மட்டும் போதும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் மத்திய அரசை கடுமையாக எதிர்க்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் இடம்பெறவில்லை.

இதற்கு கேரளா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளன. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பிரதமர் மோடிக்குக் கண்டனம் எழுதியும் உள்ளார்.