வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு.. எத்தனை மாதங்கள்?
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது
கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது
வெங்காயத்தின் விலை அதிகரிக்காமல் தடுக்கவும் குறைந்த விலையில் ஏழை எளிய மக்களுக்கு வெங்காயம் தட்டுப்பாடு இன்றைய கிடைக்கவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் வெளிநாடுகள் கோரிக்கை விடுத்தால் அந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து குறைந்த அளவு ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்படும் என வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இனி படிப்படியாக வெங்காய விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran