1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (13:31 IST)

இந்தியாவில் ஆக்ஸிஜன் சிலிண்டர் கையிருப்பு எவ்வளவு உள்ளது?

இந்தியாவில் ஆக்ஸிஜன் 50 ஆயிரம் மெட்ரிக் டன் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் 50000 மெட்ரிக் டன் கையிருப்பு உள்ளதாகவும், தினசரி 7 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அது மேலும் அதிகமாக்கப்படும் எனவும் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.