வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (16:08 IST)

ரூ.20,000 கோடிக்கு ஆயுத கொள்முதல், போருக்கு தயாராக முப்படை: மோடியின் திட்டம் தான் என்ன?

கடந்த 3 மாதத்தில் இந்திய அரசு அவசரக் கால அடிப்படையில் குண்டுகள், ஆயுதங்கள் மற்றும் முக்கியமான உதிரிப் பாகங்கள் எனச் சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை வாங்கிக்  வைத்துள்ளது. 


 
 
2016 செப்டம்பர் 18 ஆம் தேதி நடந்த உரி தாக்குதலுக்குப் பின் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முப்படையும் குறைந்தது 10 நாட்களாவது தொடர்ந்து முழுமையான போர் செய்யும் அளவிற்கு ஆயுதங்களையும் அதன் தேவைகளையும் பூர்த்திச் செய்ய முடிவு செய்துள்ளது.
 
இதானல் கடந்த 3 மாதத்தில் இந்திய அரசு சுமார் 20,000 கோடி ரூபாய்க்கு ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ் நாடுகளிடம் அவசரக் கால ஒப்பந்த முறையில் வெடிபொருட்கள் வாங்கியுள்ளது.
 
இந்நிலையில் இந்திய விமானப் படை மட்டும் கடந்த 3 மாதங்களில் 9,200 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 43 ஒப்பந்தங்களைச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.