1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 மார்ச் 2021 (12:57 IST)

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா! 10 கோடி தடுப்பூசிக்கு ஆர்டர்!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் 10 கோடி தடுப்பூசிகளுக்கு சீரம் நிறுவனத்திடம் மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி பாதிப்பு 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் எதிர்கால தடுப்பூசி தேவையை கருத்தில் கொண்டு சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் மேலும் 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிடப்படுத்தவும், பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.