மத்திய அரசு பணிகளில் தனியார் துறை ஆட்கள்! – அதிர்ச்சியில் UPSC தேர்வர்கள்!
மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) உள்ளிட்ட வழிகள் மூலம் நிரப்பப்பட்டு வந்த மத்திய அரசு பணியிடங்கள் சிலவற்றை தனியார் துறைகள் மூலம் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு பணிகளில் உள்ள காலியிடங்கள் மற்றும் புதிய பணியிடங்களுக்கு UPSC தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசின் 12 துறைகளில் உள்ள இணை செயலாளர், துணை செயலாளர், இயக்குனர் உள்ளிட்ட 20 பதவிகளுக்கான பணியிடங்களை தனியார் துறை நிபுணர்களை கொண்டு நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன்னர் இந்த பணியிடங்கள் க்ரூப் ஏ சர்வீஸ் உள்ளிட்ட வழிகளில் நிரப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது தனியார் துறை நிபுணர்களுக்கு இந்த பணியிடங்கள் அளிக்கப்படுவது மத்திய அரசு பணி தேர்வுக்காக தயாராகி வருபவர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
Edit by Prasanth.K