Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சமையல் எரிவாயுவை அடுத்து மண்ணெண்ணெயிலும் கைவைத்த மத்திய அரசு


sivalingam| Last Modified வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (05:01 IST)
மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பின்படி சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்வதோடு, மாதம் ரூ.4 உயர்த்தவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 


 
 
மத்திய அரசின் இந்த முடிவின் அதிர்ச்சியில் இருந்தே பொதுமக்களும் எதிர்க்கட்சியினர்களும் இன்னும் மீளாத நிலையில் தற்போது மண்ணெண்ணெய் மானியத்தையும் மத்திய அரசு ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
 
மண்ணெண்ணெய் உபயோகம் நாடு முழுவதும் குறைந்துள்ளதை அடுத்து, இனி 15 நாட்களுக்கு ஒருமுறை 25 காசுகள் விலையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி மண்ணெண்ணெய் மானியத்திலும் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த செய்தி சமையல் எரிவாயு இல்லாதவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவலாகவே உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :