செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2020 (12:38 IST)

விவசாயிகள் போராட்டமா? குளிரா? கூட்டத்தொடர் ரத்து ஏன்? – மத்திய அரசு விளக்கம்!

மத்திய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாகவே நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் நேரடியாக நடைபெறாமல் உள்ளன. இந்நிலையில் தற்போது மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் குவிந்து போராட்டம் நடத்தி வருவதால் குளிர்கால கூட்ட தொடரை கூட்டி இதுகுறித்து முடிவெடிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா தாக்கத்தின் காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாகவும், ஜனவரியில் பட்ஜெட் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவை இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் வரை கூட்டத்தொடர் நடத்துவதை தவிர்க்க மத்திய அரசு திட்டமிடுவதாக கூறப்படுகிறது. ஆனால் விவசாயிகள் போராட்டம் குறித்த விவாதத்தை நடத்த விரும்பாத காரணத்தாலேயே கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.