ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 4 மே 2019 (08:05 IST)

ஒரு மார்க் போச்சே! நீதிமன்றம் செல்லும் 500க்கு 499 மார்க் எடுத்த மாணவி

ஒரு மாணவரோ, மாணவியோ ஒரு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்தால் சந்தோஷத்தில் கொண்டாடுவார்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் ஹன்சிகா என்ற மாணவி அந்த ஒரு மார்க் எனக்கு வேண்டும் என்று நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளார்.
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளிவந்தபோது இரண்டு மாணவிகள் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து இந்தியாவிலேயே முதல் மாணவிகளாக தேர்வு பெற்றனர். இதில் ஒரு மாணவி தனது வெற்றியை சந்தோஷத்துடன் கொண்டாட, இன்னொரு மாணவியான ஹன்சிகாவோ, அந்த ஒரு மார்க் போச்சே, அதை விடக்கூடாது என்று மறுகூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளார். 
 
ஆங்கிலத்தில் மட்டும் அவர் 99 மார்க் பெற்றுள்ளதாகவும், தனக்கு கண்டிப்பாக 100 மதிப்பெண்கள் கிடைத்திருக்க வேண்டும் என்றும் அவர் பேட்டியில் கூறியுள்ளார். ஒருவேளை சிபிஎஸ்இ மறுகூட்டல் செய்யவில்லை என்றால் நியாயம் கேட்டு தான் நீதிமன்றம் செல்லவும் தயார் என்று அந்த மாணவி கூறியுள்ளார்.
 
மாணவியின் இந்த முடிவுக்கு அவரது பெற்றோர் உறுதுணையாக இருப்போம் என்று கூறியுள்ளனர், ஆனால் ஹன்சிகாவின் சக மாணவிகளோ, அவர் விளம்பரத்திற்காக இவ்வாறு செய்து வருவதாகவும், அவர் பெற்ற மதிப்பெண்களுக்காக சந்தோஷத்தை கொண்டாடாமல், தேவையின்றி சர்ச்சையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர். ஹன்சிகா அந்த ஒரு மார்க்கை பெற நீதிமன்றம் செல்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்