வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (17:30 IST)

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணை டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக்கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்திருந்தது, அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.
 

 
இந்த வழக்கில் தங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் சிபிஐ கைது செய்யாமல் இருக்க ஜாமின் கோரி தயாநிதிமாறன், கலாநிதிமாறன் ஆகியோர் கடந்த 2ஆம் தேதி தாக்கல் செய்திருந்தனர்.
 
அப்போது, சிபிஐ வழக்கறிஞர் கே.கே.கோயல், இந்த வழக்கில் இன்னும் விசாரணை முழுமை பெறாததால், மாறன் சகோதரர்களுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கு விசாரணையின்போது நீதிமன்றங்களில் ஆஜராகாமல், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லவும் வாய்ப்பு உள்ளதால், ஜாமின்  வழங்க நீதிமன்றம் அனுமதி அளிக்கக் கூடாது என்றும் வாதிட்டார்.
 
இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் நேரில் ஆஜராகினர்.
 
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு புதிய அழைப்பாணை வழங்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என சிபிஐ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
 
இந்த வழக்கில், சவுத் ஏசியன் என்டர்டெயிண்ட்மென்ட் மொரிஷியஸ் தரப்பில் நீரஜ் கபில் மற்றும் அஜத் ஆகியோரும் நேரில் ஆஜரானார்கள். இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 7 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.