1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 12 மார்ச் 2022 (07:56 IST)

சித்ராவுக்கு ஆலோசனை சொன்ன இமயமலை சாமியார் யார்? சிபிஐ ஆதாரத்துடன் தகவல்!

முன்னாள் பங்கு சந்தை தலைவர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஆலோசனை கூறிய இமயமலை சாமியார் யார் என்பதை ஆதாரங்களுடன் சிபிஐ டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது 
 
முன்னாள் தேசிய பங்குச்சந்தை தலைவர் சித்ரா ராமகிருஷ்ணன் மீது முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை சிபிஐ கைது செய்து அவரிடம் தற்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
 
இந்த நிலையில் சித்ரா தனக்கு இமயமலை சாமியார் ஒருவர் தான் ஆலோசனை கூறியதாக கூறியிருந்தார். இந்த நிலையில் ஆனந்த் சுப்பிரமணியன் தான் இமயமலை சாமியார் என்பதை சிபிஐ ஆதாரங்களுடன் கண்டுபிடித்து அந்த ஆதாரங்களை டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதனால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.