திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 16 ஜூன் 2021 (15:49 IST)

சிவசங்கர் பாபாவை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார்: ஜாமீன் கிடைக்குமா?

சென்னை அருகே உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் அளித்த பாலியல் புகார் காரணமாக சிவசங்கர் பாபா சற்று முன்னர் டெல்லியில் கைது செய்யப்பட்டார் என்பதும் சிபிசிஐடி போலீசார் அவரை சென்னை கொண்டுவர ஏற்பாடு செய்து வருகின்றனர் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் சிவசங்கர் பாபா டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார் என்றும் அவரை சென்னை அழைத்து செல்ல டெல்லி நீதிபதியிடம் சிபிசிஐடி போலீசார் மனு அளித்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இன்னும் சில நிமிடங்களில் டெல்லி நீதிமன்ற நீதிபதி சிவசங்கர் பாபாவை சென்னை அழைத்து செல்ல அனுமதி தருவார் என்று கூறப்படுகிறது. இதன்பிறகு அவர் சென்னை அழைத்து வரப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. சென்னை நீதிமன்றத்தில் முறைப்படி ஆஜர் செய்த பின்னர் தான் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும் சட்ட வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.