வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By vinoth
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2024 (14:00 IST)

கேம்லின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் காலமானார்!

இந்தியாவில் ஸ்டேஷனர் பொருட்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான படிப்புதவி பொருட்களைத் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது கேம்லின்(camlin) நிறுவனம். இந்த நிறுவனத்தின் அளவுகோல்கள் மற்றும் ஜியாமெட்ரி பாக்ஸ் ஆகியவை மாணவர்களின் விருப்பமான ஒன்றாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் கேம்லின் நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் தன்னுடைய 86 ஆவது வயதில் இன்று காலமாகியுள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளார். அவரது மறைவுக்கு மகாராஷ்டிரா துணை முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது உடல் சிவாஜி பார்க் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

93 ஆண்டுகள்  பழமையான அவரின் கேம்லின் பைன் சைன்ஸ் நிறுவனம் 1946ல் தனியார் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டு, 1998ல் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு பொதுத்துறை நிறுவனமாக மாறியது. மும்பையை மையமாகக் கொண்டு இந்தியாவின் முன்னணி ஸ்டேஷனரி உற்பத்தி நிறுவனமாக இருக்கும் கேம்லின் நிறுவனம் 2011 ஆம் ஆண்டு முதல் ஜப்பானின் கோக்குமயா என்ற நிறுவனத்தோடு இணைந்து செயல்பட்டு வருகிறது.