1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : புதன், 6 ஜனவரி 2016 (21:05 IST)

பழமை வாய்ந்த எச்எம்டி கடிகார கம்பெனி மூடல்: அமைச்சரவை ஒப்புதல்

நஷ்டத்தில் இயங்கும் எச்எம்டி கடிகார கம்பெனி உள்ளிட்ட 3 ஆலைகளை மூடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்து அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.


 

 
 
டெல்லியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நஷ்டத்தில் இயங்கும் எச்எம்டி உள்ளிட்ட 3 ஆலைகளை ஒப்புதல் தரப்பட்டது. 
 
அந்த ஆலைகளை மூடும் போது பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு தரவும் இதற்காக 427 கோடி ரூபாய் ஒதுக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. முத்ரா எனப்படும் பிரதமரின் சிறுதொழில் வளர்ச்சி மறுநிதியுதவி நிறுவனத்தை வங்கியாக மாற்றவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 
இதோடு ஒரு லட்சம் கோடி ரூபாயில் கடன் உத்தரவாத நிதித் தொகுப்பை ஏற்படுத்தவும் ஒப்புதல் தரப்பட்டது. மேலும், இந்தியா - பஹ்ரைன் நாடுகள் இடையில் ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாதம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு ஒப்பந்தத்துக்கும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.