வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : சனி, 13 செப்டம்பர் 2014 (12:04 IST)

பலத்த பாதுகாப்புடன் 9 மாநிலங்களில் இடைத்தேர்தல்

ஆந்திரா, சத்தீஸ்கர், சிக்கிம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அசாம், குஜராத், திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்களிலுள்ள  33 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது.

காலை 8 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

33 சட்டசபை தொகுதிகளில் 11 தொகுதிகள் உத்தரபிரதேசத்தில் உள்ளன. இதை கைப்பற்ற ஆளும் சமாஜ் வாடி கட்சிக்கும், பாஜக கட்சிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் காலை முதலே விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடைப்பெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி, முலாயம் சிங், சந்திரசேகர ராவ் ஆகிய மூவரும் தலா 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

அதில் மோடி வதோதரா, முலாயம்சிங் மணிப்புரி, சந்திரசேகரராவ் மேடக் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து வதோதரா, மணிப்புரி, மேடக் ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்து வருகிறது. அனைத்து தொகுதியிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 16 ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.