வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2018 (11:36 IST)

ராஜஸ்தானில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பு

ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவைத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார், அஜ்மீர் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள உலுபேரியா ஆகிய மூன்று மக்களவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலம் மண்டல்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள நோபரா சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அல்வார் தொகுதியில் மொத்தமாக ஆயிரத்தி 987 வாக்குச்சாவடிகளும் அஜ்மீர் தொகுதியில் மொத்தமாக 1,925 வாக்குச்சாவடிளும் இருக்கின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கிடையே போட்டி நிலவுகிறது.
 
இன்று காலை 8 மணிக்கு முதல் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை  நடைபெறும். நாட்டிலேயே முதன்முறையாக வேட்பாளர்களின் புகைப்படங்களுடன் கூடிய வாக்கு இயந்திரங்கள் இத்தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி மாதம் 1- ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.