1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 13 மே 2018 (15:37 IST)

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து - விபத்தில் 7 பேர் பலி

இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சோலான் மாவட்டத்தில் பேருந்து ஒன்று பயணிகளோடு சோலான்-ராஜ்கார் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று கொண்டிருந்தனர். 
 
நயி-நேட்டி என்ற இடத்தில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
 
இந்த கோர விபத்தில் சிக்கி பேருந்தில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீஸார் விபத்து குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.