Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

2017-பட்ஜெட் இதயமற்ற, பயனற்ற பட்ஜெட்: மம்தா பானர்ஜி ட்வீட்!

Last Modified: புதன், 1 பிப்ரவரி 2017 (16:16 IST)

Widgets Magazine

2017-ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதனையடுத்து இன்று நிதியமைச்சர் அருண்  ஜெட்லி மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதல் முறையாக ரயில்வே பட்ஜெட்டுடன் இணைந்து இன்று தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது வரலாற்று முக்கியவத்தும் வாய்ந்ததாக  கருதப்படுகிறது.
 
 
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்த பட்ஜெட் பற்றி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  கடுமையான கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
மத்திய பட்ஜெட் 2017 தவறான வழிநடத்தலுக்கு வித்திடுகிறது, என்ன சொல்கிறது என்பதற்கான தடயங்கள் எதுவும் இல்லை.  முழுதும் எண் விளையாட்டுகளாகவும் வெற்று வார்த்தைகள் நிரம்பி உள்ளது.
 
சர்ச்சைக்குரிய இந்த பட்ஜெட், பயனற்றது, அடிப்படையற்றது, நோக்கமற்றது, செயல்திட்டங்களற்றது, இதயமற்றது.  நம்பகத்தன்மையை இழந்த ஒரு அரசிடமிருந்து நாட்டின் எதிர்காலத்திற்கான எந்த ஒரு திட்டமுமில்லாத வெற்று பட்ஜெட். 2017  பட்ஜெட் ஒரு சர்ச்சைக்குரியது. இது ஆதாரமற்றது, நடவடிக்கை குறைவானது. இதயமற்றது. என குறிப்பிட்டுள்ளார்.
 
வரிசெலுத்துவோர் இன்னமும் வங்கிகளிலிருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. அனைத்து  கட்டுப்பாடுகளையும் உடனடியாக அகற்ற வேண்டும்.

 
 
பணமதிப்பு நீக்க விளைவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் எங்கே? இதனால்தான் இது தவறாக வழிநடத்தும் பட்ஜெட் ஆகும். 
 
முழுதும் எண் விளையாட்டுகளும், வெற்று வார்த்தைகளுமே நிறைந்துள்ள இந்த பட்ஜெட் ஒன்றுமேயில்லாத பட்ஜெட் என  வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பட்ஜெட் குறித்து தன்னுடைய கருத்துகளை பதிவிட்டுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சின்னம்மா, பெரியம்மா, குட்டிம்மா என்பதுதான் சட்டசபையில் நடக்கிறது - கடுப்பாகும் ஸ்டாலின்

கேள்வி நேரத்தின்போது ஜெயலலிதாவை புகழ்வது, சசிகலாவை புகழ்ந்து பேசுவது, சின்னம்மா, ...

news

சசிகலாவுக்கு புதிய சிக்கல்: மீண்டும் பாய்ந்தது விசாரணை!

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீது அந்நிய செலவாணி மோசடி வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ...

news

ஒசாமா பின்லேடன் படத்தை வைத்திருந்தது இவர்தான் - பரபரப்பு தகவல்

சென்னையை சேர்ந்த மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் சிலர் மறைந்த சர்வதேச தீவிரவாதி பின்லேடன் ...

news

சசிகலா நிரந்தரம் அல்ல: காத்திருக்கும் கண்ணுக்கு தெரியாத ஆப்பு!

ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக அவரது தோழி சசிகலா ...

Widgets Magazine Widgets Magazine