லாபம் பாத்து 10 வருஷம் ஆச்சு... முடிவை நெருங்கிய பிஎஸ்என்எல்!

Last Modified திங்கள், 24 ஜூன் 2019 (11:37 IST)
பிஎஸ்என்எல் உடனடி நிதி உதவி அவசியம் என்றும் இல்லையெனில் நிறுவனத்தை இயக்குவது கஷ்டம் என மத்திய அரசின் உதவியை நாடியுள்ளது. 
 
பிஎஸ்என்எல் நிறுவனம் தொலைத்தொடர்ப்பு துறையில் இருக்கும் மற்ற நிறுவனங்களுடன் மள்ளுக்கு நிற்க முடியாமல் கடும் சரிவினை சந்தித்து வருகிறது. நாட்டிலேயே அதிக நட்டத்தை சந்தித்த முதன்மையான பொதுத்துறை நிறுவனமாக பிஎஸ்என்எல் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 
 
பிஎஸ்என்எல் நிறுவனம் கடைசியாக லாபம் பார்த்தது 2008 - 2009 கால கட்டத்தில் மட்டுமே. மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் 4ஜி சேவையை தொடர்ந்து 5ஜி சேவைக்கு ஆயத்தமாகி வரும் நிலையில் பிஎஸ்என்எல் 3ஜி சேவையை தொடருவது, சரிவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 
இந்நிலையில், நிறுவனத்தில் பணிபுரியும் 70,000 ஊழியர்களுக்கு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க மத்திய அரசின் உதவியை நாடியுள்ளது. ஆம், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய இந்த மாத ஊதியமான ரூ.850 கோடிக்கு மத்திய அரசின் உதவியை கோரியுள்ளது. 
 
பிஎஸ்என்எல் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உடனடி நிதி உதவி அவசியம். நிதி இல்லாதபட்சத்தில் நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவது முடியாமல் போய்விடும். பிஎஸ்என்எல் தனது செயல்பாட்டை நிறுத்த வேண்டிய நிலையை நெருங்கி விட்டதாக கவலை தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :