வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By

மணமேடையில் ஓங்கி அறைந்த மணப்பெண்: மணமகன் அதிர்ச்சி

திருமணம் என்றாலே அதில் கொண்டாட்டமும் சர்ச்சையும் மாறி மாறி இருப்பது இயல்புதான். அதிலும் வட இந்திய திருமணங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். திருமணத்தை ஒரு திருவிழா போல் கொண்டாடுவார்கள்
 
இந்த நிலையில் சமீபத்தில் வட இந்தியாவில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகன் முன்பு மணமகள் ஒரு இளைஞரை ஓங்கி அறைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மணமகனும், மணமகளும் மாலை மாற்றி கொள்ளும் சடங்கின்போது மணமகனின் தோழர் ஒருவர் மணமகனை தூக்கி கொண்டார். இதனால் மணமகனின் கழுத்தில் மணமகளால் மாலையை போட முடியவில்லை. இந்த நிலையில் மணமகளின் தோழியின் நண்பர் ஒருவர் மணமகளை தூக்கி மாலை போட உதவினார்.
 
மணமகனுக்கு மாலை போட்டதும் தன்னை தூக்கிய அந்த இளைஞரை யாரும் எதிர்பாராத வகையில் கன்னத்தில் பளாரென அறைந்தார். இதனால் மணமகன் உள்பட மணமேடையில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னை தூக்கியதற்காக அறைந்ததாக மணமகள் தனது தோழியிடம் கூறினார். மணமகளிடம் அறை வாங்கிய அதிர்ச்சியில் சில வினாடிகள் உறைந்த அந்த நபர், மணமகள் தோழியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்து தனது கோபத்தை தீர்த்து கொண்டு விறுவிறுவென வெளியே சென்றுவிட்டார். இதுகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது