Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காதலனுடன் ஓடிய மணமகள் ; கேக் வெட்டி கொண்டாடிய மணமகன்


Murugan| Last Modified வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (11:34 IST)
தாலி கட்டிய சில நிமிடங்களில் காதலுடன் மணப்பெண் சென்றுவிட்டதால், அதை மணமகன் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

 

 
திரிச்சூர் மாவட்டம் கொடுங்காலூர் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருக்கும், மல்லசேரியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கும் கடந்த ஜுலை 30ம் தெதி கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றது.  அதன்பின் தம்பதிகள் சுவாமி தரிசனம் செய்தனர். 
 
அப்போது, கூட்டத்திலிருந்து ஒருவரை பார்த்து உணர்ச்சி வசப்பட்ட இளம்பெண், தன்னுடைய தாலியை கழற்றி மணமகனின் கையில் கொடுத்து விட்டு, இவரைத்தான் நான் காதலிக்கிறேன். ஆனால், இவரை திருமனம் செய்ய என் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால், இப்போது யாருடைய சம்மதமும் எனக்கு தேவையில்லை எனக்கூறி விட்டு அந்த இளைஞருடன் அங்கிருந்து சென்று விட்டார்.


 

 
இதனால் அங்கு களோபரம் ஏற்பட்டது. அதையடுத்து அங்கு போலீசார் வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், திருமணத்திற்காக செலவு செய்த ரூ.15 லட்சத்தை பெண் வீட்டார் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. முடிவில், ரூ.8 லட்சத்தை மட்டும் தருவதாக பெண் வீட்டார் கூற பேச்சு வார்த்தையில் சமாதான உடன்பாடு ஏறபட்டது.
ஆனால், சம்பந்தப்பட்ட மணமகன் இதை அவமானமாக கருதவில்லை. இதையடுத்து, தனது வீட்டிற்கு சென்ற மணமகன், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த கேக்க்கில் ‘சிறிய விழா.. பெரிய விடுதலை’ என எழுதி சந்தோஷமாக அதை வெட்டிக் கொண்டாடினார். 
 
சமூகவலைத்தளங்களில் இவரின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. பலர் இவர் மீது பரிதாபப்பட்டாலும், சிலர் இவரை பாராட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :