நடுரோட்டில் காதலிக்கு சர்ப்ரைஸ்..... வைரலாகும் வீடியோ
மகாராஷ்டிராவில் தன் காதலிக்கு நடுரோட்டில் சர்ப்ரைஸாக காதலை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மார்ச் 11-ம் தேதி, காதலன் தன் காரில் இருந்து இறங்கி, ஒரு காலில் மண்டியிட்டு, தன் காதலியை வருங்கால மனைவியாக்க ப்ரோபோஸ் செய்தார். பின்னர், இருவரும் வாகனத்தில் ஏறி, அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு சில உள்ளூர் மதவாதக் கட்சிகள், அந்த ஜோடி செய்த செயலுக்கு உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த ஆண் இணையத்தின் வாயிலாகவே பொது மன்னிப்புக் கோரினார். இருந்தும் சில அமைப்பினர் அவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தவுள்ளோம் என்று அறிவித்துள்ளனர்.