1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (16:33 IST)

தொலைக்காட்சி சாகச நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒத்திகை பார்த்த வாலிபர் பலி

ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சாகச நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, சாகசங்கள் செய்து பார்த்த ஒரு வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.


 

 
ஹைதராபாத் பாத்தபஸ்தி பகுதியில் வசிப்பர் ஜலாலுதீன்(19). இவர் சிறு வயதில் இருந்தே சாகசங்கள் செய்வதில் ஆர்வம் உள்ளவர். அந்த பகுதிகளில் அவ்வப்போது சில சாகச நிகழ்ச்சிகளையும் செய்து வந்தார்.
 
அவர், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்  ‘இந்தியாவின் காட்டலண்ட்’  என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பினார். அதற்காக, சாகசங்கள் செய்து, அதை வீடியோ எடுத்து அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
 
அவர் சாகசங்கள் செய்ய, அதை அவரின் நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். 
 
முதலில் மண்ணெண்ணையை வாயில் ஊற்றி அதை ஊதி நெருப்பை ஏற்படுத்தினார். அதன்பின் தான் அணிந்திருந்த டிசர்ட்டில் மண்ணெண்ணையை ஊற்றி அதில் தீ வைத்தார். திட்டப்படி அவர் தீயை பற்ற வைத்து, உடனடியாக ஆடையை கழற்றி விட வேண்டும்.
 
அப்படி அவர் கழற்ற நினைத்த போது, டீசர்ட் இறுக்கமாக இருந்ததால் அவரால் உடனடியாக கழற்ற முடியவில்லை. அதற்குள் தீ மளமளவென அவரது ஆடை மற்றும் உடல் முழுவதும் பரவியது. இதனால் அவர் அலறித்துடித்தார். அதன்பின் தீ அணைக்கப்பட்டு உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.