திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (12:44 IST)

மைய மண்டபத்தில் இரு அவைகள்: கூட்டுக்கூட்டத்தின் காரணம் என்ன?

டிசம்பர் 4, 5 தேதிகளில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு. 

 
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது என்பதும் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்கட்சிகள் அமளி செய்து வருவதால் நாடாளுமன்ற வளாகம் பெரும் பரபரப்பில் உள்ளது என்பதும் தெரிந்ததே. 
 
இந்நிலையில் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்றத்தில் அமளி நீடித்து வருவதால் மாநிலங்களவை மற்றும் மக்களவை என இரு அவையும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே டிசம்பர் 4, 5 தேதிகளில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
பொதுக்கணக்கு குழு ஏற்படுத்தப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை டிசம்பர் 4 ஆம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார். இதனால் டிசம்பர் 4, 5 தேதிகளில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.