டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் புரளியே..! உள்துறை அமைச்சகம் விளக்கம்..!!
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் புரளியே என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் உள்ள சுமார் 100 பள்ளிகளுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகப்படும்படியான எதுவும் கிடைக்காததால் பெற்றோர்கள் பீதியடைய வேண்டாம் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதால் மக்கள் பீதி அடைய தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.
டெல்லி காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் நெறிமுறைகளின்படி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.