பி.எம்.டபுள்யூ காரை ஆற்றுக்குள் தள்ளிவிட்ட இளைஞர்..அப்படி என்ன காரணம்?
பி.எம்.டபுள்யூ காரை இளைஞர் ஒருவர் ஆற்றுக்குள் தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஹரியானா மாநிலம் யமுனா நகர் எனும் பகுதியைச் சேர்ந்த ஜமீந்தார் ஒருவர், தனது மகனுக்கு பி எம் டபுள்யூ ஒன்றை வாங்கி தந்துள்ளார். ஆனால் மகன், ஜமீந்தாரிடம் ஜாக்குவார் தான் வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ஜமீந்தார் ஜாக்குவார் இல்லை, அதனால் தான் பி எம் டபுள்யூ காரை பரிசளித்தாக கூறியுள்ளார்.
தான் கேட்ட காரை வாங்கி கொடுக்காததால் ஆத்திரமடைந்த மகன், காரை வாங்கிய மறுநாளிலேயே ஆற்றில் அந்த காரை தள்ளிவிட்டார். அந்த கார் ஆற்றின் நடுவில் உள்ள பெரிய புதர் ஒன்றில் சிக்கிகொண்டது. இதனை கண்ட பொதுமக்கள் அந்த காரை ஆற்றிலிருந்து மீட்டனர். ஜமீன் தாரின் மகன், ஆற்றில் தள்ளிவிட்ட காரின் மதிப்பு 35 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.