1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 28 அக்டோபர் 2014 (15:09 IST)

கறுப்புப் பண விவகாரம்: அம்பானி குடும்பத்தினர் உள்ளிட்ட 15 பேர் வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கியுள்ளதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, கோகிலாபென் அம்பானி, நரேஷ் கோயல், சந்தீப் டாண்டன், உள்ளிட்ட 15 பேர் வெளிநாட்டில் சட்டவிரோதமாக கறுப்புப் பணம் பதுக்கியுள்ளதாக ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
 
வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் வைத்துள்ள மூன்று தொழிலதிபர்களின் பெயர்களை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
 
இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “கறுப்புப் பணம் பதுக்கியுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள 3 பேர் பெயரை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டோம்.
 
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். கறுப்புப் பணம் பதுக்கிய அனைவரின் பெயரையும் வெளியிட பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் விரும்பவில்லை. சக்தி வாய்ந்த நபர்களை பாதுகாக்க மத்திய அரசு முயல்கிறது.
 
முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, கோகிலாபென் அம்பானி, நரேஷ் கோயல், சந்தீப் டாண்டன், உள்ளிட்ட 15 பேர் வெளிநாட்டில் சட்டவிரோதமாக கறுப்புப் பணம் பதுக்கியுள்ளனர்.
 
கறுப்புப் பணம் பதுக்கிய அனைவரது பெயரையும் மத்திய அரசு வெளியிட வேண்டும். அப்போதுதான் நாங்கள் கூறிய குற்றச்சாட்டு உண்மையா அல்லது பொய்யா என்பது பற்றி மக்களுக்குத் தெரியும்“ என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.