Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மணிப்பூரிலும் பாஜக ஆட்சி 5-ல் 4 மாநில ஆட்சியை பிடித்தது


sivalingam| Last Modified ஞாயிறு, 12 மார்ச் 2017 (20:38 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் உத்தரபிரதேசம், உத்தர்காண்ட் மாநிலங்களில் பெருவாரியான தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்த பாஜக, இழுபறி நிலையில் உள்ள மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 


மத்தியில் ஆட்சி நடப்பதால் இந்த இரு மாநிலங்களிலும் வெற்றி பெற்ற சிறிய கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவை கொடுக்க முன்வந்துள்ளது. இதனால் ஐந்து மாநிலங்களில் நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமையும் என தெரிகிறது

கோவாவில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மணிப்பூரிலும்  பாஜக ஆட்சி அமைய போவது உறுதி என பாஜக மூத்த தலைவர் ராம்மாதவ் அறிவித்துள்ளார். மணிப்பூரில் விரைவில் முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு கவர்னரிடம் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரும் என தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :