1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: புதன், 23 ஏப்ரல் 2014 (12:47 IST)

'மோடியை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை' என பேசிவருக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை

ஜார்காண்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக தலைவர் கிரிராஜ் சிங்,'மோடியை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை' என பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில், தவறான கருத்துக்களை தெரிவித்த இவருக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 
 
சில நாட்களுக்கு முன்னர் ஜார்காண்டின் கோடா மாவட்டத்தில் பேசிய  பாஜக தலைவர் கிரிராஜ் சிங், 'நரேந்திர மோடியை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை எனவும், அவர்கள் பாகிஸ்தானில் இருக்க வேண்டுமென்றும் பேசியிருந்தார்.
 
இது தொடர்பாக கிரிராஜ் சிங் மீது ஏற்கனவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவரின்  இத்தகைய கருத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணையம், அவர் பீகார்,  ஜார்காண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல்  பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதித்துள்ளது. 
 
இது குறித்து அளிக்கப்பட்ட உத்தரவில்,  இத்தகைய கருத்து அனைவருக்கும் சம உரிமை மற்றும் சம வாய்ப்பு வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இது மீறுவதாக உள்ளது என்றும், இது போன்ற அறிக்கைகள் வெவ்வேறு  சமூக மக்களிடையையே பகையுணர்வு மற்றும் வெறுப்பு ஆகியவை வளர்த்து பொது அமைதிக்கும் பாதகம் விளைவிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.