1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 31 ஜூலை 2022 (14:08 IST)

தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது: பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா

jp nadda
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறமையான ஆட்சியை பிரதமர் மோடி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாராட்டிவிட்டு சென்ற நிலையில் தமிழகத்தில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது என பாஜக தேசிய தலைவர் நட்டா தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜகவின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து தேசிய தலைவர் நட்டா பேசினார் அப்போது.  இதை நாம் ஒருபோதும் பாஜக அலுவலகம் என்று எண்ணக் கூடாது என்றும் அலுவலகம் என்றால் காலை 10 மணிக்கு திறந்து மாலை 6 மணிக்கு மூடப்படும் என்றும் ஆனால் இருபத்தி நான்கு மணி நேரமும் நமது சித்தாந்தத்தை உடன் வாழும் ஒரு இடமாக இந்த பாஜக அலுவலகம் இருக்க வேண்டும் என்றும் பேசினார் 
 
மேலும் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது என்றும் குடும்ப அரசியலுக்கு எதிராக போராடுவதே நமக்கு மிகப்பெரிய சவால் என்றும் அவர் கூறினார் அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது