திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 21 டிசம்பர் 2022 (15:13 IST)

பாஜகவுக்கு புதிய தேசிய தலைவரா? மோடி, அமித்ஷாவின் திட்டம் என்ன?

modi amitshah
பாஜகவின் தேசிய தலைவராக தற்போது ஜேபி நட்டா இருக்கும் நிலையில் பாராளுமன்ற தேர்தலை புத்துணர்ச்சியுடன் சந்திக்கும் வகையில் புதிய தேசிய தலைவர் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை சந்திப்பதற்காக பல்வேறு அதிரடி மாற்றங்களை பாஜக செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் விரைவில் நடைபெற இருப்பதாகவும் அப்போது தேசிய தலைவர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
வெங்கையா நாயுடு, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி இவர்களில் ஒருவர் தேசிய தலைவராக வாய்ப்பு உள்ளதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரின் பெயரும் இந்த பட்டியலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran