1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2017 (12:16 IST)

பாஜக-வின் ஜனாதிபதி வேட்பாளர்; இவர்களில் யார்??

ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், பாஜக-வின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது வரும் 15 தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. 


 
 
எதிர்க்கட்சிகள் பொதுவான வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், பாஜக-வில் சுஷ்மா ஸ்வராஜ், ஆர்எஸ்எஸ் இயக்கத் தலைவர் மோகன் பகவத் என ஏராளமான பெயர்கள் அடிபடுகின்றன. 
 
எனவே, வரும் 15 ஆம் தேதி அமித்ஷா ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். 
 
டெல்லி பாஜக வட்டாரங்களில், லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அல்லது ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரெளபதி முர்மு இவர்கள் இருவரில் ஒருவர் தான் ஜனாதிபதி வேட்பாளர் என பேசப்படுகிறது.
 
அதே போல, துணை ஜனாதிபதி பதவிக்கு வெங்கையா நாயுடுவின் பெயர் பரிசீலிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.