Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாஜக ஜனாதிபதி வேட்பாளரின் மதவெறி பேச்சு: முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஏலியன்கள்!

பாஜக ஜனாதிபதி வேட்பாளரின் மதவெறி பேச்சு: முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஏலியன்கள்!


Caston| Last Modified செவ்வாய், 20 ஜூன் 2017 (15:15 IST)
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது மதவெறி கருத்து ஒன்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தற்போது நினைவுப்படுத்தியுள்ளார்.

 
 
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலையுடன் முடிவடையவுள்ளதால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், சார்பில் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
அடிப்படையில் வழக்கறிஞரான இவர் தாழ்த்தப்பட்டோர் அமைப்பு தலைவராக இருக்கிறார். தலித் சமுதயத்தை சேர்ந்த ஒருவரை பாஜக குடியரசுத் தலைவராக அமர வைக்க இருக்கிறது என பாஜகவினர் பெருமைப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கருத்து தெரிவித்துள்ளார்.
 
பாஜக சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக பீஹார் மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்த்தை அறிவித்திருப்பது அவர்களின் எதேச்சதிகாரமாகும். குடியரசுத் தலைவர் வேட்பாளராக தலித் ஒருவரை அறிவித்திருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்கிறது பாஜக.
 
ஆனால் ராம்நாத் கோவிந்த் பாஜகவின் செய்தித்தொடர்பாளராக இருந்தபோது முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் இந்தியாவைப் பொறுத்தவரை ஏலியன்கள் என்று குறிப்பிட்டவர். மத மற்றும்மொழி சிறுபான்மையினருக்கான உரிமைகள் குறித்த ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைகளை நிராகரித்தவர். எனவே அவர் தலித் பின்னணியை உடையவர் என்பது தவறான பார்வை என கூறியுள்ளார் சீதாராம் யெச்சூரி.


இதில் மேலும் படிக்கவும் :