Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது: பாஜக எம்பி சர்ச்சை பேச்சு...

Last Updated: புதன், 7 பிப்ரவரி 2018 (15:44 IST)
பாஜக எம்பி வினய் காட்டியார் சில தினங்களுக்கு முன்னர் தாஜ் மஹால் தேஜ் கோவிலாக மாற்றப்படும் என தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார். தற்போது இந்தியாவில் இனி முஸ்லிம்கள் இருக்ககூடாது என தெரிவித்துள்ளார்.

மஜ்லிஸ் இத்தேஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை யாரைனும் பாகிஸ்தானியர்கள் என அழைத்தால், அவர்களைக் கைது செய்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக எம்பி வினய் காட்டியார், இந்தியாவில் முஸ்லிம்கள் தங்கி இருக்ககூடாது. அவர்கள் நீண்ட நாட்கள் இங்கு இருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் நாட்டை பிரிதித்துவிடுவார்கள்.
இந்தியாவில் அவர்கள் தங்கி இருக்க வேண்டிய அவசியம் என்ன?. அவர்கள் பாகிஸ்தானுக்கோ அல்லது வங்கதேசத்துக்கோ செல்லலாம் என தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :