வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (16:17 IST)

எச். ராஜாவை அடுத்து தேர்தல் அரசியலில் இருந்து விலகிய இன்னொரு பாஜக பிரபலம்..!

தமிழக பாஜக பிரமுகர் எச் ராஜா சமீபத்தில் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாகவும் இருப்பினும் பாஜகவின் வெற்றிக்காக மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறியிருந்தார். அவரது இந்த அறிக்கையை பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தற்போது கர்நாடக மாநில பாஜாக பிரமுகர் ஒருவரும் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
 
கர்நாடக மாநிலம் சிவமோகா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேர்தல் அரசியலில் இருந்து தான் ஓய்வு பெறுவதால் தனது பெயரை எந்த தொகுதிக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் 40 ஆண்டு அரசியல் பயணத்தில் தனக்கு உடன் இருந்த அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran