வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (16:00 IST)

பாஜக எம்.எல்.ஏவை ஷூவால் தாக்கிய பாஜக எம்.பி – உண்ணாவிரதப் போராட்டம் !

நலத்திட்டங்கள் துவக்க விழாவில் பெயர் விடுபட்டதில் பிரச்சனையாகி பாஜக எம்.பி. சரத் திரிபாதி அதேக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ராகேஷ் சிங்கை ஷூவால் தாக்கிய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சாந்த் கபீர்நகர் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் சரத் திரிபாதி. அதே தொகுதியின் கபீர் நகர் சட்டப்பேரவைத் tஹொகுதி எம்.எல்.ஏ. ராகேஷ் சிங் பாகேல். இருவருமே ஆளும் பாஜகவை சேர்ந்தவர்களே. நேற்று சாந்த் கபீர் நகர் பகுதியில் நலத்திட்ட உதவி வழங்குதல் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சரத் திரிபாதி, ராகேஷ் சிங் பாகேல் இருவருமே சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கலந்துகொண்டனர்.

நலத்திட்டங்களின் ஒருபகுதியாக சாலை போடும் திட்டத்தில் பேர் போடுவது தொடர்பாக இரண்டு பேருக்கும் இடையே சர்ச்சை கருத்து வேறுபாடு உருவானது. வாக்குவாதம் முற்றி இரண்டு பேருக்கும் இடையில் கைகலப்பு உருவானது. ஒருக் கட்டத்தில் கோபமடைந்த சரத் திரிபாதி, தனது ஷூவைக் கழற்றி ராகேஷ் சிங்கை சரமாரியாக அடித்தார்.

இதற்குப் பதிலாக ராகேஷ் சிங்கும் சரத் திரிபாதியை தாக்கினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து தன்னை ஷூவால் தாக்கிய சரத் திரிபாதிக்கு எதிராக ராகேஷ் சிங் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.  அவருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்களும் பெருமளவில் கூடினர்.  சரத் திரிபாதி மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என ராகேஷ் சிங் அறிவித்துள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய இருவரையும் அழைத்து உத்தரபிரதேச பாஜக தலைவர் எம்.என்.பாண்டே விசாரணை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.