1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 ஏப்ரல் 2019 (15:21 IST)

மனோகர் பாரிக்கர் மகனுக்கு சீட் மறுப்பு – பாஜக முடிவு !

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகனுக்கு சீட் கொடுக்க பாஜக தலைமை மறுத்துள்ளது.

மனோகர் பாரிக்கர் கோவா முதலமைச்சராக பதவி வகித்து வந்த நிலையில் கணைய புற்று நோயால் மே 19 ஆம் தேதி மரணமடைந்தார்.  அதனையடுத்து சபாநாயகர் பிரோமத் சாவந்த் கோவவின் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டார். பாரிக்கரின் மறைவிற்குப் பின அவரது பனாஜி தொகுதிக் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இப்போது பனாஜி தொகுதிக்கு மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அத்தொகுதிக்கு பாஜக வேட்பாளராக மனோகர் பாரிக்கரின் மகனான உஜ்பலுக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு சீட் மறுக்கப்பட்டு சித்தார்த் குன்கோலின்கருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

சித்தார்த் குன்கோலின்கர் மனோகர் பாரிக்கர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகி முதலமைச்சராக பதவியேற்ற போது அவருக்காக பனாஜி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தவர் என்பதால் அவருக்கு இப்போது சீட் வழங்கப்பட்டுள்ளது.