வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2024 (13:11 IST)

புதுச்சேரியில் பாஜக போட்டி!

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால்  நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  தமிழகத்திலும், புதுச்சேரியிலும், பாஜக யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது என்ற கேள்வி எழுந்தது.

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார்.

இந்த நிலையில், புதுச்சேரியில், பாஜக போட்டியிடுவதை முதல்வர் ரங்கசாமி  உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைப்பது நமது கடமை. கட்சியைப் பலப்படுத்த 5 பேர் கொண்ட உயர்மட்ட குழு மற்றும் 10 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்படும். வருகின்ற தேர்தல் மிக முக்கியம் என்ற தனது கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார்.