ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2022 (10:11 IST)

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு: பயணிகள் ரயிலுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

bihar train
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு: பயணிகள் ரயிலுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அக்னிபாத்  என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருவது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் பயணிகள் ரயிலுக்கு தீ வைத்து போராட்டக்காரர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் 
 
பீகார் மாநிலம் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த இளைஞர்கள் இரண்டு பெட்டிகளுக்கு தீ வைத்தனர். இதனால் அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் பதறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினார்கள் 
 
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் ரயில்களுக்கு தீ வைக்கும் போராட்டக்காரர்கள் ராணுவத்தில் சேர தகுதியற்றவர்கள் என்று முன்னாள் தளபதி விபி மாலிக் அவர்கள் தெரிவித்துள்ளார்