1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 29 செப்டம்பர் 2014 (18:02 IST)

நான் தரிசனம் செய்தபிறகு கோவிலை கழுவிவிட்டது உண்மை: பீகார் முதல்வர் விளக்கம்

தான் வழிபாடு செய்த கோவிலை பூசாரிகள் கழுவிவிட்டது உண்மை என்று பீகார் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
 
பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி, மதுபானி மாவட்டத்தில் உள்ள கோவிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் வெளியே சென்றதும், கோவிலை கழுவிவிட்டதாக கூறப்படுகிறது. கோவிலில் இருந்து புறப்பட்டுச் சென்ற பின், கோவிலை பூசாரிகள் சுத்தப்படுத்தியதாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும், இந்த விஷயத்தில் பொதுமக்களை குறைகூற விரும்பவில்லை என்றும் முதல்வர் மஞ்சி கூறினார்.
 
முதல்வர் மஞ்சி தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவ்வாறு அவர்கள் நடந்துகொண்டதாக பேசப்பட்டது. ஆனால், கோவிலில் முதல்வருடன் இருந்த பீகார் அமைச்சர்கள் ராம் லட்சுமணன் மற்றும் நிதிஷ் மிஸ்ரா ஆகியோர் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என மறுத்துள்ளனர்.
 
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இன்று பேசிய மஞ்சி, தன் வாழ்க்கையில் பொய் பேசியதில்லை என்று கூறினார். மேலும், உள்ளூர் அதிகாரிகள் மீதான தனது குற்றச்சாற்றுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.