வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2015 (00:08 IST)

பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் சத்ருகன் சின்ஹா

பீகார் தேர்தலில், பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் நடிகர் சத்ருகன் சின்ஹா பெயர் இடம் பெற்றுள்ளது.
 

 
பீகாரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளறது. தேர்தல் பிரசாரத்தின் போது, பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டது.
 
நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 40 தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
 
மேலும், பீகார் தேர்தலில் நிதீஷ் குமாருக்கு ஆதரவாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட, நடிகர்  சத்ருகன் சின்ஹா பெயர் பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது அரசியல் தலைவர்கள் பலரையும் வியக்கவைத்துள்ளது.