Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதால் ரூ.20 லட்சம் அபராதமா? - நடிகர் விளக்கம்

செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (18:57 IST)

Widgets Magazine

பிக்பாஸ் வீட்டிலிருந்து தற்கொலை மிரட்டல் விடுத்து வெளியேறியதால் தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக எழுந்த தகவல் உண்மையில்லை என தெலுங்கு நடிகர் சம்பூர்னேஷ் பாபு கூறியுள்ளார்.


 

 
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில் கலந்துக்கொண்ட சம்பூர்னேஷ் பாபு உடல்நலம் குறைவாக உள்ளதாகவும், பிக் பாஸ் வீடு வசதியாக இல்லை எனவும் கூறி கத்தியை எடுத்து தற்கொலை செய்துக்கொள்ள போவதாக மிரட்டினார். இதனால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறியதாக கூறி வெளியேற்றப்பட்டார்.  
 
இதைத்தொடர்ந்து அவர் கத்தியை எடுத்து தற்கொலை செய்துக்கொள்ள போவதாக மிரட்டியது வன்முறைக்கு விதிட்டதாக கூறி பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் அவருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படதாகவும், அந்த அபராத தொகையை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பத்து நாட்களுக்கு செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதித்ததாகவும் செய்திகள் வெளியானது.


 

 
இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி விளக்கம் அளித்துள்ள சம்பூர்னேஷ் “பிக்பாஸும்,  ஸ்டார் மா தொலைக்காட்சியும் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தது. அதிலிருந்து வெளியேறியதற்காக நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு அபராதம் விதித்ததாக எழுந்த தகவல் வெறும் வதந்தி மட்டுமே. அதில் உண்மையில்லை” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலம், சொத்துக்கள் முடக்கம் - வருமானத்துறை அதிரடி

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை வருமானத்துறை அதிகாரிகள் முடக்கம் ...

news

திருநங்கைகள் சேலை அணிய கூடாது: மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!

திருநங்கைகள் சேலை அணியக் கூடாது எனவும் அவர்கள் ஆண்களை போல பேண்ட் சட்டை அணிய வேண்டும் என ...

news

சசிகலா சீராய்வு மனு நாளை விசாரணை: மீண்டும் சிறையா? இல்லை போயஸ் கார்டனா?

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் ...

news

189 கொலை செய்த பெண் சைக்கோ: அமெரிக்காவில் பரபரப்பு!!

அமெரிக்காவில் 189 கொலைகளுடன் தொடர்புடைய 39 வயதான சைக்கோ பெண் ஒருவரை போலிசார் கைது ...

Widgets Magazine Widgets Magazine