வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (12:50 IST)

'மோடி ஒரு விலங்கு, அவருக்கு பாடம் கற்பிக்க வேண்டும்' - பென்னி பிரசாத் வர்மா

காங்கிரஸ் தலைவர் பென்னி பிரசாத் வர்மா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியப்போது , பாஜக பிரமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஒரு விலங்கு என்றும் அவருக்கு பாடம் கற்பிக்க வேண்டி இருக்கிறது என்றும் பேசி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 
 
நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சாடிக்கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
 
இதன்படி, அண்மையில் ஒரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் பென்னி பிரசாத் வர்மா பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை 'விலங்கு' என குறிப்பிட்டுள்ளார். 
 
கோண்டாவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியப்போது, நரேந்திர மோடியை விலங்கு எனக் குறிப்பிட்டும்,  அவருக்கு பாடம் கற்பிக்க வேண்டுமெனவும் பேசினார். 
 
இதற்கு முன்னர் பென்னி பிரசாத் வர்மா, மோடியை கொலைக்காரர் எனவும், ராகுல் காந்தி நாட்டின் பிரதமர் ஆனால் மோடியும், அமித் ஷாவும் கோத்ரா கலவரத்திற்காக வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்படுவார்கள்  எனவும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.  இதனிடையே பென்னி பிரசாத் வர்மா தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.