பெங்களூரில் ரெட் அலெர்ட்: நடுரோட்டில் துப்பாக்கிச் சூடு


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (17:42 IST)
பெங்களூரில் வேளாண் விலைபொருள் சந்தைக் குழுவின் தலைவர் பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததை அடுத்து பெங்களூர் நகரம் முழுவதும் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 


பெங்களூரில் வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவின் தலைவர் கே.ஸ்ரீநிவாசா பயணித்த கார் மீது இன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூடி பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்ததுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கார் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த கே.ஸ்ரீநிவாசா மற்றும் அவரது கார் டிரைவர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது பெங்களூரில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :