கம்யூனிஸ்ட் கட்சியின் போஸ்டரில் பெனாசிர் பூட்டோ புகைப்படம்: பாஜக கண்டனம்
கம்யூனிஸ்ட் கட்சியின் போஸ்டரில் பெனாசிர் பூட்டோ புகைப்படம்: பாஜக கண்டனம்
கேரளாவில் ஒட்டப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் போஸ்டரில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசீர் பூட்டோ புகைப்படம் இருந்ததற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் புகைப்படம் இடம்பெற்ற பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் போஸ்டரில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் புகைப்படம் இடம் பெற்றதற்கு கேரள பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்ட ஒருவரை கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்து வருகிறார்கள் என்று பாஜகவினர் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விமர்சனத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி என்ன பதில் கூறப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Edited by Mahendran