வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (07:31 IST)

மாட்டிறைச்சியே கேரளாவில் வெள்ளம் ஏற்படக் காரணம் - பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சைப் பேச்சு

கேரளாவில் மக்கள் அதிகளவில் மாட்டிறைச்சி சாப்பிடுவதால் தான் அங்கு மழை வெள்ளம் ஏற்பட்டது என கர்நாடக பாஜக எம்.எல்.ஏ ஒருவர் குறியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்புகளில் இருந்து உதவிகள் குவிந்து வரும் நிலையில் சாமியார் சக்ரபாணி மகாராஜ் என்பவர், 'கேரளாவில் மாட்டிறைச்சி சாப்பிடாதவர்களுக்கு மட்டும் உதவி செய்யுங்கள்' என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக கர்நாடக பாஜக எம்எல்ஏ ஒருவர் புதுவித விளக்கம் அளித்துள்ளார். இந்து உணர்வுகள் தூண்டி விடப்பட்டதால்(அதாவது மாடுகளை கொன்று உண்பதால் தான்) கேரள வெள்ளம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார். 
 
மேலும் கேரள மக்கள், கடந்தாண்டு இதே மாதம் தான் மாட்டிறைச்சி சாப்பிடும் திருவிழா நடத்தினார்கள். அதனால் தான் இந்த மாதத்தில் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ வின் இந்த கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.