1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By abi
Last Modified: வெள்ளி, 6 மே 2016 (15:22 IST)

மாட்டிறைச்சிக்கு தடை: 5 ஆண்டு ஜெயில், 10,000 ரூபாய் அபராதம்

மாட்டிறைச்சி உண்பதற்கு, விற்பனை செய்வதற்கு தடை செய்ய கோரிய மகாராஷ்டிரா மாநில அரசின் முடிவை ஏற்றுக் கொண்டு மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.


 

மகாராஷ்டிரா மாநில அரசு முன்னதாகவே மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் வார்பில் பொதுநல வழக்கு தொடர்ப்பட்டது.

வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, குப்தா ஆகியோர் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கினர். இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது, மாட்டிறைச்சி உண்பது  தண்டனைக்குரிய குற்றம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்றம் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வெளியில் கொல்லப்பட்ட மாட்டின் இறைச்சியை வைத்திருப்பது குற்றமல்ல என்று தெரிவித்துள்ளது.

மேலும் மாட்டிறைச்சி விற்பனை செய்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் மாட்டிறைச்சி வைத்திருப்போருக்கு ரூ.2000 அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கும் சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.