வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 1 அக்டோபர் 2021 (13:49 IST)

இன்று முதல் இந்த பேங்க் செக் செல்லாது! – அதிரடி அறிவிப்பு!

கடந்த சில மாதங்களில் மற்ற வங்கிகளுடன் இணைக்கப்பட்ட வங்கிகளின் காசோலைகள் இனி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மிகவும் குறைவான வாடிக்கையாளர்களோடு செயல்பட்டு வந்த வங்கிகள் பல மற்ற வங்கிகளோடு இணைக்கப்பட்டன. அந்த வகையில் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனிடட் பேங்க் ஆப் இந்தியா, அலகாபாத் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் மற்ற வங்கிகளோடு இணைக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த வங்கிகளால் முன்னதாக வழங்கப்பட்டிருந்த காசோலை புத்தகங்கள், எம்ஐசிஆர் குறியீடு ஆகியவை அக்டோபர் 1 ஆன இன்று முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் புதிதாக இணைக்கப்பட்ட வங்கிகளில் புதிய காசோலை புத்தகங்களை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.