வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2016 (09:11 IST)

பெங்களூரு பள்ளியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்

பெங்களூரு பள்ளியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


 

 
கர்நாடக மாநிலம் பெங்களூரு வர்த்தூர் காவல்துறையினரின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சிறுத்தையின் நடமாட்டம் இருந்தது.
 
இந்நிலையில், அந்த விப்ஜியார் பள்ளி வளாகத்தில் கடந்த 7 ஆம் தேதி சுற்றி திரிந்த சிறுத்தையைப் பார்த்த காவலாளி, இது குறித்து, பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார்.
 
இது குறித்து காவல்துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு விரைந்து வந்து வனத்துறையினர் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.
 
இந்த சிறுத்தையை பிடிக்கும் முயற்சில் ஈடுபட்டிருந்தபோது, 3 வனத்துறை அலுவலர்களும், ஒரு மருத்துவரும் காயமடைந்தனர்.
 
இதைத் தெடர்ந்து, சுமார் 14 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, மயக்க ஊசி போடப்பட்டு  சிறுத்தை பிடிக்கப்பட்டது.
 
இந்நிலையில், அதே பள்ளியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், அதை சிலர் பார்த்ததாகவும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
 
இதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
இதனால், அந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.